கோவையில் ரூ.10,740 கோடியிலும், மதுரையில் ரூ.11,340 கோடி செலவிலும் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி, பிப்ரவரி மாதம் துவங்கும் என சென்னை மெட்ரோ நிறுவன மேலாண்மை இயக்குனர் சித்திக் தகவல் தெரிவித்தார். "மெட்ரோ பணிமனை அமைப்பதற்கு 16 ஏக்கர் நிலம் தேவை. வழித்தடம் அமைப்பதற்கு, 10 ஹெக்டேர் நிலம் தேவைப்படும். பணிமனை, கோவை சக்தி பொறியியல் கல்லூரி அருகே அமைக்கப்படும்” என்றார்.