மகாராஷ்டிரா: மும்பையில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டு வளாகத்திற்குள் பாம்பு நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாஜிஸ்திரேட் கோர்ட்டின் 27-வது அறையில் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போது, 2 அடி நீள நல்ல பாம்பு ஒன்று நுழைந்தது. பாம்பை பார்த்தவுடன் வழக்கு விசாரணைக்காக வந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினர். இதையடுத்து, பாம்பு பிடிப்பவர்கள் சுமார் ஒரு மணி நேரம் தேடியும் பாம்பு பிடிபடவில்லை.