மூத்த தலைவர்களை புறம் தள்ளிவிட்டு அன்புமணி பாமக தலைவரானது எப்படி என அமைச்சர் சிவசங்கர் கேள்வியெழுப்பியுள்ளார். “ஜி.கே.மணி வகித்த தலைவர் பதவியை எதற்காக அன்புமணிக்கு கொடுத்தனர்? சாதி வாரி கணக்கெடுப்பில் மோடி அரசை கேள்வி கேட்டு, இட ஒதுக்கீட்டிற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பாஜக கூட்டணியை விட்டு பாமக வெளியேறுமா? அரசியல் ஆதாயத்திற்கு பாஜகவோடு சேர்ந்து மக்களை ஏமாற்றுகின்றனர்” என்றார்.