உத்தர பிரதேசம்: ஆக்ராவில் ஹோலி கொண்டாட்டத்தின் போது சிலர் அதிக ஒலி எழுப்பும் வகையில் பாடல்களை ஸ்பீக்கரில் ஒலிபரப்பி மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுத்தனர். இதனால் கோபமடைந்த பெண்ணொருவர் சத்தத்தை குறையுங்கள் என கூறி அவர்களின் செயலை தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் அப்பெண்ணின் ஆடையை கிழித்து அவரை பெல்ட் மற்றும் கொம்பால் தாக்கியது. இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.