வயிற்றுப் புண்களை ஆற்றுவதில் தேங்காய் பால் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு மூடி துருவிய தேங்காய், ஒரு ஸ்பூன் ஊறவைத்த கசகசா, ஒரு ஏலக்காய் சேர்த்து நன்றாக அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து அருந்தலாம். இந்த பாலை தொடர்ந்து மூன்று நாள் குடித்து வந்தால் வயிறு மற்றும் வாய் பகுதிகளில் உள்ள புண்கள் மறைந்து காணாமல் போகும். இந்த பாலில் கசகசா சேர்ப்பது முக்கியம். ஏனென்றால் கசகசா வயிற்றுப் புண்களை ஆற்றும்.