15-ம் நூற்றாண்டிலேயே இந்திய பெருங்கடலுக்கு இந்த பெயர் தான் வழங்கப்பட்டு வருகிறது. ஐரோப்பாவில் இருந்து வணிகத்திற்காக இந்தியா நோக்கி வந்த வணிகர்கள், இந்த கடலை இந்திய பெருங்கடல் என அழைக்கத் தொடங்கினர். மேலும் இந்தியாவின் பெரும் பகுதியானது இந்திய பெருங்கடலை ஒட்டி கடற்கரைகளாக அமைந்துள்ளது. எனவே இந்த கடலுக்கு 'இந்தியப் பெருங்கடல்' என்பது நிரந்தரப் பெயராகிப்போனது.