உடலில் இருக்கும் தேவையற்ற நச்சுக்களை நீக்கும் பானம்

59பார்த்தது
உடலில் இருக்கும் தேவையற்ற நச்சுக்களை நீக்குவதற்கு குறைந்த செலவில் ஒரு ஜூஸை நாம் வீட்டிலேயே தயாரித்துவிடலாம். இரண்டு பெரிய நெல்லிக்காய், சிறிதளவு வெள்ளரிக்காய், ஒரு துண்டு இஞ்சி, ஒரு கொத்து கறிவேப்பிலை, புதினா, சிறிதளவு இந்துப்பு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி, எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். இதனால் உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகள், குடலில் தேங்கியிருக்கும் நச்சுக்கள் நீக்கப்பட்டு உடல் புத்துணர்வாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி