இன்று (டிச.27) காலை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்ட நிலையில், தற்போது நடிகர் கூல்சுரேஷும் அதேபோல் தன்னைத்தானே அடித்துக் கொண்டுள்ளார். சமுத்திரக்கனி நடித்துள்ள திருமாணிக்கம் திரைப்படத்தை பார்த்த பின் கூல்சுரேஷ், அத்திரைப்படத்தை Promote செய்யும் விதமாக திருமாணிக்கம்.. திருமாணிக்கம்.. டைரக்டர் லிங்குசாமி.. டைரக்டர் லிங்குசாமி.. என்று மீண்டும் மீண்டும் சொல்லியபடி தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார்.