உறவுகளுக்குள் விவாதம் அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்படும்பொழுது நாம் கோபத்தில் பேசும் சில வார்த்தைகள் இன்னும் நிலைமையை மோசமாக்கலாம். குறிப்பாக மனைவியுடன் சண்டை போடும் பொழுது அழகு பற்றி குறை சொல்வது, மற்றவர்களுக்கு முன்னால் சண்டையிடுவது, நீ மட்டும் என் வாழ்வில் இல்லாமல் இருந்தால் எனக் கூறுவது, மற்றவர்கள் முன்பு அவமரியாதை செய்வது, மனைவி வீட்டினர் மீது புகார் பேசுவது, மனைவியை தரம் தாழ்த்தி பேசுவது போன்றவற்றை செய்யாமல் இருத்தல் வேண்டும்.