மன்மோகன் சிங் ஊழலுக்கு எதிரானவர் என அன்னா ஹசாரே புகழாரம் சூட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் தொடர்பான உடனடி முடிவுகளை எடுத்தவர் மன்மோகன் சிங். எப்போதும் நாட்டைப் பற்றியும், நாட்டு மக்களுக்காக எப்படி சிறப்பாகப் பணியாற்ற முடியும் என்பதைப் பற்றியும் சிந்தித்தவர். இவ்வுலகை உடல் வடிவில் விட்டுச் சென்றாலும், மக்களின் நினைவுகளில் என்றும் அவர் நீடித்திருப்பார்" என்று தெரிவித்துள்ளார்.