உடலில் ஏதேனும் காயம் ஏற்பட்டவுடன் TT Injection போட மருத்துவர்கள் பரிந்துரைப்பது வழக்கம். டிடி தடுப்பூசி என்பது ‘Tetanus toxoid vaccine’ என்று அழைக்கப்படுகிறது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். டெட்டனஸ் நோய் தொற்றை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்கள் சுற்றுச்சூழலில் இருக்கும். அவை காயங்கள் மூலம் உடலுக்குள் நுழைந்துவிடும். இதனை தடுக்கவே டிடி தடுப்பூசி போடப்படுகிறது. அடிக்கடி போட்டால் serum sickness syndrome என்ற பாதிப்பு ஏற்படும்.