பட்ஜெட் கணக்கை அரசு சரியாக பார்க்கட்டும், எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சட்டப்பேரவை வளாகத்தில் பேட்டியளித்த அவர், தேர்தல் வரும்போது கூட்டணியை முடிவு செய்வோம், எங்கள் கொள்கை நிரந்தரமானது. திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே எங்கள் கொள்கை என்றார். பேரவையில் இன்றைய விவாதத்தில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுகவின் கணக்குகளை எங்கோ ஒருவர் அமர்ந்துகொண்டு போட்டுக் கொண்டு இருப்பதாக கூறியிருந்தார்.