ஐபிஎல் 2025: முதல் போட்டிக்கு மழை அச்சுறுத்தல்

79பார்த்தது
கொல்கத்தாவில் உள்ள பிராந்திய வானிலை மையம் மேற்குவங்கத்தின் சில பகுதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணித்துள்ளது. இதனால் நாளை (சனிக்கிழமை) ஈடன் கார்டன் மைதானத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையேயான ஐபிஎல் 2025 சீசனின் தொடக்க ஆட்டம் ஆபத்தில் சிக்கியுள்ளது. ஐபிஎல் 18வது சீசன் நாளை கண்கவர் தொடக்க விழாவுடன் தொடங்குகிறது. இதனால் மழை முன்னறிவிப்பு காரணமாக போட்டி ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி