ஹூவாய் நிறுவனம் ஹூவாய் புரா எக்ஸ் (Huawei Pura X) என்கிற புதிய போல்டபிள் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 2 டிஸ்பிளேக்கள், 4 கேமராக்கள், 66W வயர்டு சார்ஜர் மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜர் போன்ற பல முக்கிய அம்சங்கள் உள்ளன. ஹூவாய் புரா எக்ஸ் ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன், சீனாவில் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.89,000 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் சுமார் ரூ.95,000 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.