திமுக மட்டுமே தங்களுக்கு எதிரி என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் இன்று பேசிய அவர், திமுக மட்டுமே எங்கள் எதிரி. திமுகவை தவிர வேறு யாரும் எங்களுக்கு எதிரி அல்ல. மக்கள் விரோத திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். அதிமுக தற்போது விழித்துக் கொண்டது. விழித்துக் கொண்டவர்கள் பிழைத்துக் கொள்வார்கள் என்றார். இபிஎஸ்-ன் இந்த பேச்சு, திமுக அல்லாத பிற கட்சிகளுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதை சூசகமாக தெரிவித்துள்ளார்.