ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நாளை (மார்ச். 22) தொடங்கவுள்ளது. நடப்பு சீசனில் பல்வேறு புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதில், இரவு நேர ஆட்டங்களில் 2-வது இன்னிங்சின்போது பனிப்பொழிவின் தாக்கத்தால் பந்து ஈரமாகி விடுகிறது. ஈரமான பந்தை பவுலர்களால் சரியாக பிடித்து துல்லியமாக வீச முடியவில்லை. இதை கருத்தில் கொண்டு இந்த ஐபிஎல்-ல் இரண்டு பந்துகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.