தவெக பொதுக்குழுவில் அக்கட்சியின் ஆதவ் அர்ஜுனா பேசும் போது, "திமுக கூட்டணியில் விசிக உள்ள நிலையில் வேங்கைவயல் பிரச்சனை குறித்து திருமாவளவன் ஏன் பேசவில்லை? யார் அவரை தடுத்தார்கள். அவரின் உழைப்பை திமுக இழிவுப்படுத்துகிறது. தவெக, வேங்கைவயல் பிரச்சனைக்கு தீர்வு காணும். வைகோவை போன்று திருமாவளவனை காலி செய்கின்றனர். அவர் சிந்திக்க வேண்டும். விசிக அமைதியானதால் பட்டியலின மக்களுக்கு தவெக குரல் கொடுக்கிறது" என்றார்.