விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜோயில்பட்டி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 9. 77 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட நியாய விலை கடையை இன்று (ஜீலை- 26 ) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு நிதி மின்சாரம் மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார். ஒன்றிய பெருந்தலைவர் முத்துமாரி, வைஸ் சேர்மன் கல்குறிச்சி ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் மந்திரிஓடை கண்ணன், காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் ஆர் கே செந்தில், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.