திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் அருகே கிரிவலத்தின் போது சில இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடந்த 3 நாட்களாக இருசக்கர வாகனங்களை அனுமதிக்க விடாமல் போலீசார் தடுத்து வருகின்றனர். இதனால், உள்ளூர் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் வீடுகளுக்குச் பல கி.மீ., தூரம் சுற்றிச் செல்வதாக இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.