தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருமுறையும், மத்திய அமைச்சராகவும் பணியாற்றிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ. இன்று (டிச. 14) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரின் உடல் புதைக்கப்படும் என முதலில் தகவல் வெளியானது. இந்நிலையில் நாளை (டிச. 15) சென்னை முகலிவாக்கம் எல் & டி காலனி பகுதியில் அமைந்துள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.