சென்னை விரும்பாக்கத்தில் கூவம் ஆற்றில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிய பெண்ணை, காவல் ஆணையரின் சிறப்பு அதிவிரைவு படை போலீசார் காப்பாற்றினர். ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் குடியிருக்கும் டாய்சா குடியிருப்புக்கு அருகே செல்லும் கூவம் ஆற்றில் பெண் ஒருவர் தவறி விழுந்து தத்தளிப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, அருகில் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் இயந்திரத்தை உதவிக்கு அழைத்து, பெண்ணை பத்திரமாக மீட்டுள்ளனர்.