சென்னை பூந்தமல்லி ராமசந்திரா நகரைச் சேர்ந்தவர்கள் மேத்தா (37) - ரேகா (33) தம்பதியினர். இவர்களுக்கு 11 மற்றும் 5 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மகள்கள் படிக்கும் பள்ளியில் விளையாட்டு போட்டிகள் நடந்தது. அதில் கலந்துகொள்ள குடும்பத்துடன் சென்றிருந்தனர். அப்போது பெற்றோர்களுக்காக போட்டிகள் நடந்தது. விளையாடிக்கொண்டிருந்த ரேகாவுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.