தூத்துக்குடி: மழை, வெள்ள பாதிப்பு காரணமாக திருச்செந்தூருக்கு செல்வதை பக்தர்கள் 2 நாட்கள் தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் கூறியதாவது, "மழை மற்றும் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக திருச்செந்தூர் சாலைகளில் வெள்ள நீர் செல்வதால் வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே 2 நாட்களுக்கு திருச்செந்தூர் கோயிலுக்கு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.