கடவுளுக்கு செய்யப்படும் பூஜைக்கு பூக்களை முழுதாக பயன்படுத்த வேண்டுமே தவிர, கிள்ளி பொடிப்பொடியாக்கி அர்ச்சனை செய்ய கூடாது. பூக்களை அசுத்தமான கைகளினால் தொட்டு பறிக்கக்கூடாது. மேலும், தானாக விழுந்தது, காய்ந்து போனது, மற்றவர்கள் முகர்ந்து பார்த்தது, அசுத்தமான இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட பூக்களையும் பகவானுக்கு அர்ப்பணிக்கக்கூடாது. தண்ணீரில் முழுகிய பூக்களும் பூஜைக்கு ஆகாத பூக்கள் தான்.