திமுக தலைமை செயற்குழுக் கூட்டம் வரும் டிச. 18ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதாலும் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.