லஞ்சம் பெற்றதாக ஊராட்சி மன்ற தலைவர் கைது

61பார்த்தது
விருதுநகர் அருகே வீடு கட்டுவதற்கு பிளான் அப்ரூவல் சான்றிதழ் வழங்க ரூபாய் 5000 லஞ்சமாக வாங்கிய ஊராட்சி மன்றத்தலைவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




விருதுநகர் ஆர். ஆர். நகர் அருகே துலுக்கப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக நாகராஜன் (55) இருந்து வருகிறார். இந்நிலையில் விருதுநகர் கத்தாளம்பட்டியை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவரான மணிமாறன் அவரது சொந்த ஊரான துலுக்க பட்டியில் உள்ள நிலத்தில் வீடு கட்டுவதற்கு பிளான் அப்ரூவல் சான்றிதழ் கேட்டு ஊராட்சி மன்றத்தலைவரை அணுகிய நிலையில் சான்றிதழ் கொடுப்பதற்கு ரூபாய் 15, 000 லஞ்சமாக அவர் கேட்டுள்ளார்.

இதுகுறித்து மணிமாறன் விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இன்று ரசாயனம் தடவிய 5000 ரூபாயை ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜிடம், மணிமாறன் வழங்கியபோது மறைந்திருந்த ஏ. டி. எஸ். பி ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், சாலமன்துரை மற்றும்
லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி