‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா’ - மு.க.ஸ்டாலின் கண்டனம்

75பார்த்தது
‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா’ - மு.க.ஸ்டாலின் கண்டனம்
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவிற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது X தள பக்கத்தில், " ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா’ என்ற கொடூரமான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையானது கூட்டாட்சித் தன்மையை சிதைத்து, ஆட்சியை சீர்குலைக்கும். எழுக இந்தியா இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்த தாக்குதலை முழு பலத்துடன் எதிர்ப்போம்!" என்று பதிவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி