சென்னை விமான நிலையத்தில் 1 மணி நேரம் பெய்த அடைமழை காரணமாக முதலாவது மையத்தில் பயணிகள் செல்ல கூடிய பகுதியில் மேற்கூரையிலிருந்து மின்விளக்குகள் இருக்கும் பகுதியில் அருவிபோல் மழைநீர் கொட்டியது. இதனை கண்ட விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இப்பகுதியில் விமான பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு வேறு வழியில் அனுப்பி வைக்கப்பட்டனர். மழை நீர் அதிகரிக்கும் நிலையில் அதனை தடுத்து நிறுத்துவதற்கும் விமான நிலைய அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.