15 உள்நாட்டு விமானங்கள் தாமதம்

74பார்த்தது
கனமழை காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 15 உள்நாட்டு விமானங்கள் தாமதமாகியுள்ளன. சென்னை விமான நிலையம், கிண்டி, அசோக்நகர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 
இதனால், சென்னைக்கு வரும் விமானங்கள் சிறிது நேரம் வானில் வட்டமடித்து பின் தரையிறங்கி வருகின்றன. இதனிடையே சென்னையில் இருந்து கொச்சிக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், சென்னைக்கே திருப்பி விடப்பட்டது.

தொடர்புடைய செய்தி