வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில மாதங்களாக கடும் அழுத்தத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 84.88 என்ற வரலாறு காணாத அளவில் சரிந்தது. டாலரின் மதிப்பு உயர்வு மற்றும் இறக்குமதி அதிகரிப்பு ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.