பச்சிளம் குழந்தைகளின் கேட்கும் திறன் பரிசோதனை (Universal Newborn Hearing Screening Program) திட்டம் மக்களவை உறுப்பினர் கனிமொழியால் அண்மையில் தூத்துக்குடியில் தொடங்கி வைக்கப்பட்டது. Hearing for Life அறக்கட்டளை மற்றும் தூத்துக்குடி மாவட்ட சுகாதார சேவைகள் இணைந்து, பச்சிளம் குழந்தைகளின் செவித்திறன் குறைபாடுகளைக் கண்டறிந்து, சிகிச்சை அளித்து நிவர்த்தி செய்வதை நோக்கமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.