தனது காதலர் பென்னி பிளாங்கோவை நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக பாப் பாடகி செலினா கோம்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இவரது இந்த அறிவிப்பு ரசிகர்கள் பலரும் லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர். பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இவரது இந்தப் பதிவு தற்போது உலக அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. மேலும் இவர்களின் திருமணம் எப்போது என்பது குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை.