ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஹைகோர்ட் வளாகத்திற்குள் கைமாற்றப்பட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனை கேட்ட நீதிபதி சென்னை ஹைகோர்ட் வளாகத்திற்குள் வெடிகுண்டு கொண்டுவரப்பட்டது எப்படி என கேள்வியெழுப்பியுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் இது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.