ஆந்திராவை சேர்ந்த ஆஞ்சனேயா பிரசாத் - சந்திரலேகா தம்பதி குவைத்தில் வேலை பார்ப்பதால் அவர்களது 12 வயது மகளை சந்திரலேகாவின் சகோதரி லட்சுமி வீட்டில் விட்டுச்சென்றுள்ளனர். இந்நிலையில், லட்சுமியின் மாமனார் குட்டா ஆஞ்சனேயலு(59) 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அறிந்த ஆஞ்சனேயா குவைத்தில் இருந்து வந்து ஆஞ்சனேயலுவை கொலை செய்துவிட்டு மீண்டும் குவைத்திற்கு சென்றுள்ளார். தற்போது குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.