விருதுநகர் மாவட்டம் சாத்தூரில்
கரிசல் இலக்கியத்தையும், கரிசல் பண்பாட்டையும் நாமும் நமது வருங்காலச் சந்ததிகளும் அறிந்து கொள்ளவும், கரிசல் இலக்கியங்கள் பற்றிய ஆர்வத்தை மாணவர்களிடையே ஏற்படுத்துவதும், கரிசல் இலக்கியப் படைப்புகளை மக்களிடையே கொண்டு போய்ச் சேர்ப்பதும், புதிய படைப்பாளர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், மாணவர்கள், பொதுமக்கள், இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும், வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தவும், கரிசல் இலக்கியத்தை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் வகையில் “கரிசல் இலக்கிய கழகம்” உருவாக்கப்பட்டு, பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக இன்று சுற்றுச்சூழல் தின கருத்தரங்க நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
கரிசல் மண்ணான நமது பகுதிகளில் நீர் நிலைகளை எவ்வாறு உருவாக்கி, பாதுகாத்தனர். நீரினை தேக்கி விவசாயத்திற்கும், குடிநீருக்கும் எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்ற குறிப்புகள் கரிசல் இலக்கியத்தில் இடம் பெற்றிருக்கின்றது. பண்டைய காலத்தில் நீர் நிலைகளை எவ்வாறு பாதுகாத்தனர் என்பது குறித்த பல்வேறு ஆய்வு அறிக்கைகள் தெளிவாக எடுத்துரைக்கிறது. நீர் அதிகமாக உள்ள பகுதிகளில் அதன் பெருமைகளை பேசுவதை விட, நீர் குறைவாக உள்ள பகுதிகளில் தான் நீரின் பெருமைகள் பற்றி உணர்ந்துள்ளனர். என்று பேசினார்.