ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தகவல் அளித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட், "ஹிஸ்புல்லா தலைவர் ஹஷேம் சஃபிதீன் கொல்லப்பட்டார். ஹிஸ்புல்லா முன்னாள் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதற்கு பிறகு அந்த அமைப்பை வழிநடத்த சரியான தலைமை இல்லை. அந்த அமைப்பு உடைந்து போயுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.