ஆயுத பூஜை விடுமுறை: பேருந்தில் பயணிக்க 30,000 பேர் முன்பதிவு

50பார்த்தது
ஆயுத பூஜை விடுமுறை: பேருந்தில் பயணிக்க 30,000 பேர் முன்பதிவு
ஆயுத பூஜை வருகிற 11ஆம் தேதியும், விஜயதசமி வருகிற 12ஆம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, தமிழகம் முழுவதும் 1,715 சிறப்பு பேருந்துகள் இயக்க இருப்பதாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது. அதன்படி இன்று (அக்.09) 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், நாளை (அக்.10) 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் என 2 நாட்களில் பயணம் செய்ய ஒட்டு மொத்தமாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி