விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய், தந்தை இல்லாமல் சகோதரியின் ஆதரவில் கல்வி பயின்று வரும், மாணவிக்கு இசைப் பயிற்சி மேற்கொள்வதற்கு மாணவிக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ. 5, 000/- க்கான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப. , அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வரும் செல்வி. முத்துலெட்சுமி என்பவர் தாய், தந்தை இல்லாமல் சகோதரியின் ஆதரவில் கல்வி பயிலுவதாகவும், மாவட்ட மற்றும் மாநில அளவில் விளையாட்டு மற்றும் பாட்டு போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகள் பெற்றிருப்பதாகவும், தான் இசை பயிற்சி மேற்கொள்வதற்கு ஏதாவது உதவி செய்யுமாறும் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார்.
அந்த கோரிக்கையினை பரிசீலனை செய்து, அந்த மாணவிக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ. 5, 000/- க்கான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.