தமிழகத்தில் விவசாய பணியில் வடமாநிலத்தவர்கள்.. முடிச்சு விட்டீங்க போங்க

54பார்த்தது
மயிலாடுதுறையில் நெல் சாகுபடி பணிகளில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாவட்டத்தில், சம்பா, தாளடி, குறுவை சாகுபடி பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறி கொல்கத்தாவில் இருந்து வடமாநில ஆண் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நாற்றுப்பறித்து, நடவு செய்யும் பணியில் ஈடுபடத்தொடங்கியுள்ளனர். ஒப்பந்த முறையில் ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால், உள்ளூர் விவசாய தொழிலாளர்கள் விரக்தியில் உள்ளனர்.

நன்றி: தந்தி டிவி
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி