உணவுடன் ஊறுகாய் இருந்தால் தான் பலருக்கும் சாப்பிட பிடிக்கும். இப்படி தினமும் ஊறுகாய் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்கின்றனர் மருத்துவர்கள். அதிக அளவு உப்பு இருப்பதோடு ஏராளமான எண்ணெய் ஊறுகாயில் சேர்க்கப்படுகிறது. அதனால் இதயத்திற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனுடன் உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கின்றன. மேலும், நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடும்.