தமிழக கோயில்களில் வழங்கப்படும் அர்ச்சனை சீட்டு முதல் குடமுழுக்கு, திருப்பணிகள் என அனைத்திலும் ஊழல் நடப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். அறநிலையத்துறையாக இல்லாமல் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழலில் திளைத்து அறமற்ற துறையாக இருக்கிறது என்றும் விமர்சித்துள்ளார். மேலும், கோயில்கள் அருகே இருக்கும் மதுக்கடைகளை மூட, அறநிலையத்துறை எடுத்த நடவடிக்கை என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.