செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறியுள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகைச்செல்வன், "இதுகுறித்து இபிஎஸ் விரைவில் உங்களிடத்தில் பேசுவார். செல்வாக்கு இல்லாதவர்களை பற்றிப் பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அதிமுகவில் உட்கட்சி பூசல் இல்லை. சிறுசிறு சலசலப்புக்கெல்லாம் அதிமுக அஞ்சாது" என பேட்டியளித்துள்ளார்.