நீலகிரியில் அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “திமுக ஆட்சியில் இருக்கும்வரை நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குள் வரவில்லை. ஏன் அம்மையார் ஜெயலலிதா இருக்கும்வரை கூட தமிழ்நாட்டில் நீட் தேர்வு அனுமதிக்கப்படவில்லை. அவர் மறைவுக்கு பின்னர் பன்னீர் செல்வமும், பழனிசாமியும் பாஜகவின் பாதம் தாங்கிகளாக இருந்து தமிழ்நாட்டில் நீட் தேர்வை அனுமதித்தார்கள். பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும்போது, நீட் விலக்கு வேண்டும் என ஏன் அதிமுக நிபந்தனை விதிக்கவில்லை?” என கேள்வி எழுப்பியுள்ளார்.