பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் நிதிஉதவி பெற்றுவரும் மிஷினரி மருத்துவமனையில் அடுத்தடுத்த 7 மரணத்தால் போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேசம் மாநிலம் தாமோவில் செயல்பட்டு வரும் மருத்துவமனையில் பிரபல பிரிட்டிஷ் மருத்துவர் ஜான் கெம் பெயரில் மோசடி செய்து 7 பேரின் மரணத்துக்கு காரணமாக அமைந்த நரேந்திர விக்ரமாதித்ய யாதவ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட போலி மருத்துவரிடம் விசாரணை நடந்து வருகிறது.