நடிகர் அஜித்குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் இன்று (ஏப்., 10) உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கவுள்ள நிலையில், நள்ளிரவு முதலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், பிரபு, சுனில், ஜாக்கி ஷெராப், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.