இந்தியாவுக்கு நிம்மதி.. டிரம்ப் போட்ட அதிரடி உத்தரவு

79பார்த்தது
இந்தியா உட்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீதான பரஸ்பர வரியை 90 நாட்களுக்கு
நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும், சீனாவுக்கு மட்டும் 125% ஆக வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2ஆம் தேதி டிரம்ப் 180-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பு முறையை அறிவித்தார். இந்தியாவுக்கு 26%, சீனாவுக்கு 34%, கம்போடியாவுக்கு 49% என வரி விதித்தார். இதை எதிர்த்து சீனா அமெரிக்கா மீது 34% வரி விதித்த நிலையில், கூடுதலாக சீனா மீது தற்போது 125% வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி