மத்திய அமைச்சரின் பேத்தி சுட்டுக் கொலை

85பார்த்தது
மத்திய அமைச்சரின் பேத்தி சுட்டுக் கொலை
பீகாரின் கயாவில் மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் பேத்தி சுஷ்மா தேவி, அவரது கணவரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுஷ்மா தனது குழந்தைகள், சகோதரி பூனம் குமாரியுடன் வீட்டில் இருந்தபோது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இருப்பினும், மத்திய அமைச்சர் மஞ்சி இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. நேற்று நண்பகலில் சுஷ்மாவுக்கும், கணவர் ரமேஷூக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ​​ரமேஷ் நாட்டுத் துப்பாக்கியால் சுஷ்மா சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி