ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில், திமுக ஆட்சி விளம்பரத்தில் நடைக்கின்ற ஆட்சி என முன்னாள் அமைச்சர் கே. டி ராஜேந்திர பாலாஜி விமர்சனம்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வத்திராயிருப்பில் அதிமுக சார்பில் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி,
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை தமிழக முழுவதும் கொண்டாடுகின்ற கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் தான், இந்த ஆட்சி நல்ல ஆட்சியா? இந்த ஆட்சியில் மக்களுக்கு ஏதாவது கிடைக்கிறதா? எதும் இல்லை. இந்த ஆட்சியில் விலைவாசி உயர்ந்துவிட்டது.
இந்த ஆட்சி விளம்பரத்தால் நடக்கும் ஆட்சி. என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். கூட்டத்திற்கு ஸ்ரீவில்லிபுத்துார் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த நகர, ஒன்றிய நிர்வாகிகள் என பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.