நீதிமன்ற அனுமதியின்றி நாட்டில் எந்தவொரு வீடு மற்றும் கட்டிடங்களையும் இடிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் குற்றவாளிகளின் வீடுகள் இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், பொது சாலை, நடைபாதைகள், ரயில் பாதைகள், நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.