மௌன விரதம் என்பது ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வதே ஆகும். உடல் உறுப்புகளை எந்தவித செயல்பாடுகளிலும் ஈடுபடுத்தாமல் அமைதியாய் வைத்திருப்பதே மௌன விரதம் எனப்படும். மௌன விரதம் இருப்பவர்கள் மனதில் தேவையற்ற சிந்தனைகள் இருக்கக் கூடாது. வாய் பேசக்கூடாது என்பதற்காகா யாருடனும் சைகையில் பேசுதல், பேப்பரில் எழுதி காண்பித்தல் போன்றவற்றில் ஈடுபடக் கூடாது. இறை நினைவில் மட்டுமே இருக்க வேண்டும். மனதை தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும்.